சாக்லேட் மக்ரூன்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நைசாக பொடித்த முந்திரி - 120 கிராம்

வெண்ணெய் - 30 கிராம்

பொடித்த சர்க்கரை - 120 கிராம்

கோகோ (Drinking chocolate) - 3 தேக்கரண்டி

மைதா மாவு - 15 கிராம்

முட்டை வெள்ளை கரு - 2 முட்டையில் எடுத்தது

செய்முறை:

பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி பட்டர் பேப்பர் போடவும்.

வெள்ளைக் கருவை நன்றாகக் கெட்டியாகும் வரை முள்கரண்டியால் அடிக்கவும்.

கரண்டியில் எடுத்தால் அதிலேயே இருக்கும் படியாகவும், கீழே விழாதபடியாகவும் அடித்தல் வேண்டும்.

வெள்ளைக் கருவை அடிக்கும் பொழுது அதனுடன் ஒரே ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

பொடித்த முந்திரி, சர்க்கரை, மைதா மாவு, கோகோ பவுடர் கலந்து உருக்கிய வெண்ணெயையும் அடித்த முட்டையுடன் சேர்க்கவும்.

பேக்கிங் தட்டில் சிறுசிறு உருண்டைகளாக வைத்து நடுவில் பாதி முந்திரியை வைக்கவும்.

350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்: