சாக்லேட் மஃபின்ஸ் வித் பீனட்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் துருவிய சாக்லேட் - 50 கிராம் உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம் சர்க்கரை - கால் கப் உப்பு - ஒரு சிட்டிகை முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி பால் - 5 மேசைக்கரண்டி (தேவைக்கேற்ப) வெனிலா எஸன்ஸ் - அரை தேக்கரண்டி வேர்க்கடலை - கால் கப்

செய்முறை:

அவனை 180 C’ல முற்சூடு செய்யவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து நன்றாக சலித்து வைக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.

சாக்லேட்டை டபுள் பாய்லர் முறையில் உருக்கிக் கொள்ளவும்.

உருக்கிய சாக்லேட்டுடன் ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெயைச் சேர்த்து ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் சர்க்கரை

வெனிலா எஸன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

சர்க்கரை கரைந்ததும் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

பிறகு சிறிது சிறிதாக மைதா மாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்து கொள்ளவும்.

கடைசியாக பால் சேர்த்து மஃபின் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். (மாவின் தன்மைக்கு ஏற்ப கூடுதலாகவோ

குறைவாகவோ பால் சேர்த்துக் கலக்கவும்).

அத்துடன் உடைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கலந்து மஃபின் மோல்டுகளில் நிரப்பி

அவனில் வைத்து 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

உள்ளே விடும் டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் போது எடுத்து

நன்றாக ஆறவிட்டுப் பரிமாறவும்.

சுவையான

மிருதுவான சாக்லேட் மஃபின்ஸ் தயார்.

குறிப்புகள்: