சாக்லேட் தம் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் பொடித்த சர்க்கரை - ஒரு கப் நெய் - அரை கப் முட்டை - 3 கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி டியூட்டி ப்ருட்டி

ரெய்சின்ஸ் - தேவையான அளவு உப்பு - சிறிதளவு பேக்கிங் பவுடர் வெனிலா எசன்ஸ்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி பீட்டர் அல்லது முட்டையை அடிக்க உதவும் கரண்டி கொண்டு நன்கு அடித்து கொள்ளவும்

நுரை வரும் வரை நன்றாக அடிக்கவும்.

பின்னர் அதனுடன் தூள் செய்த சர்க்கரை

நெய் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்னர் சிறிதளவு பேக்கிங் பவுடர்

வெனிலா எசன்ஸ்

கோ கோ பவுடர் சேர்த்து கலக்கவும்.

அதனுடன் டியூட்டி ப்ருட்டி

ரெய்சின்ஸ் மற்றும் மைதா மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு கலக்கவும்.

கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில்

உட்பகுதியில் வெண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மேல் மைதா மாவை தூவவும். மாவு பாத்திரத்தின் எல்லா பகுதியிலும் நன்கு ஒட்டி கொள்ளும். பாத்திரத்தை கீழ் நோக்கி தட்டினால்

மீதம் உள்ள மாவு உதிர்ந்து விடும். கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதற்காக இவ்வாறு செய்ய வேண்டும். இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். அடுப்பில் தம் போடும் ப்ளேட் அல்லது தோசை கல்லை வைத்து அதன் மேல் கேக் கலவையை வைக்கவும்.

கேஸை ஸ்ம்மில் 30 நிமிடம் வரை வைக்கவும். வெந்ததும் அதை ஒரு தட்டில் கவிழ்த்து பின்பு அதே பாத்திரத்தில் மேல் பாகம் அடியிலும்

அடிபாகம் மேலும் இருக்குமாறு வைத்து மறுபடியும் மூடி போட்டு 10 - 15 நிமிடம் வரை வைக்கவும். பின்னர் ஒரு கத்தி அல்லது டுத்பிக்கை கேக்கினுள் விட்டு பார்த்தால் மாவு ஒட்டாமல் வர வேண்டும்.

கேக் ஆறிய பின்பு கட் செய்து பரிமாறலாம்.

குறிப்புகள்: