சாக்லேட் சிப் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒன்றேகால் கப்
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம் (அல்லது) அரை கப்
வெள்ளைச் சர்க்கரை - கால் கப்
ப்ரவுன் சர்க்கரை - அரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - 2 (அல்லது) 3 மேசைக்கரண்டி
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
பொடித்த பாதாம் - அரை கப்
செய்முறை:
மைதா மாவுடன் கோக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.
அத்துடன் பொடித்த பாதாமைச் சேர்த்து
நன்றாகக் கலந்து கொள்ளவும்.
வெண்ணெயுடன் பொடித்த வெள்ளைச் சர்க்கரை மற்றும் ப்ரவுன் சர்க்கரை சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ளவும். அத்துடன் அடித்த முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதனுடன் சிறிது சிறிதாக மாவுக் கலவையைச் சேர்த்துப் பிசையவும்.
கடைசியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்துக் கலந்து வைக்கவும். அவனை 180 C' ல் முற்சூடு செய்யவும்.
மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக அழுத்தி
பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். (ஒவ்வொன்றிற்கும் 2 இன்ச் இடைவெளி இருக்குமாறு வைத்து அடுக்கவும்).
பிறகு ட்ரேயை அவனில் வைத்து 10 - 12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். (அவனில் வைத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ
ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்).
டேஸ்டி & க்ரிஸ்பி சாக்லேட் சிப் குக்கீஸ் ரெடி. காற்றுப் புகாத டப்பாவில் ஸ்டோர் செய்யலாம்.