சாக்லேட் கேக் (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்

வெண்ணெய் - 200 கிராம்

சீனி - 200 கிராம்

சாக்லேட் பவுடர் - 1 பெரியகரண்டி

முட்டை - 6

பேக்கிங் பவுடர் - 1 பெரியகரண்டி

செய்முறை:

மாவை சலித்துக் கொள்ளவும்.

முட்டை சீனியை நன்கு நுரை வரும் வரை கலக்கிக் கொள்ளவும்.

அதில் வெண்ணெயை போட்டு கிளறி அத்துடன் மாவு பவுடர் போட்டு நன்கு கலக்கவும்.

பின் 280°F சூடாகிய அவனில் தட்டில் மாவை ஊற்றி வைத்து 25 நிமிடம் கழித்து மேலே சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்:

கேக் சிவந்தவுடன் ஒரு கத்தியை கொண்டு நடுவில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் அதுதான் பதம்.