சாக்லேட் கேக் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய்- 150 கிராம்

சீனி- 200 கிராம்

மைதா- 250 கிராம்

முட்டை- 3

பேக்கிங் பெளடர்- 1 மேசைக்கரண்டி

கொதி நீர்- அரை கப்

கோக்கோ பவுடர்- 2 மேசைக்கரண்டி

செய்முறை:

கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

மைதாவையும் பேக்கிங் பெளடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.

மைதா கலவையையும் கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும்.

160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ஆறியதும் துண்டுகள் செய்யவும்.

குறிப்புகள்:

பொதுவாக ஆறிய கேக்கின் மேல் ஐஸிங் தடவுவதற்கு முன் சிறிது ஆரஞ்சு அல்லது பைனாப்பிள் ஜாம் எடுத்து ஒரு ஸ்பூனால் சிறிது அடித்துக் கொண்டு அதை விரல்களால் அல்லது ஸ்பாட்டுலாவால் எடுத்து மெதுவாக மிக இலேசான லேயராக தடவ வேண்டும். இதனால் ஐஸிங் செய்யும்போது அது கேக்கின் மீது நன்றாக பற்றிக் கொள்ளும்.