சாக்லேட் கேக் (3)
தேவையான பொருட்கள்:
சாக்லேட்கேக் மாவு பாக்கெட் - ஒன்று (விரும்பிய ப்ராண்ட்) முட்டை - மூன்று எண்ணெய் (அல்லது) பட்டர் - 60 மில்லி தண்ணீர் - கேக் பாக்கெட்டில் போட்டிருக்கும் அளவு ஐஸிங் செய்ய: விப்பிங் கிரீம் பாக்கெட் - இரண்டு குளிர்ந்த பால் - 300 மில்லி வெனிலா பவுடர் - இரண்டு தேக்கரண்டி கோகோ சுகர் - மூன்று தேக்கரண்டி அலங்கரிக்க: கலர் ஜெம்ஸ் - ஒரு பாக்கெட் ஸ்ட்ராபெர்ரி - இரண்டு கேக் டெக்கரேசன் ஸ்டிக்ஸ் - ஒரு சிறிய டப்பா
செய்முறை:
கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கேக் பவுடர் போட்டு பின் முட்டைகளை உடைத்து ஊற்றி எண்ணெய் தண்ணீர் அடுத்தடுத்து போட்டு நன்கு பீட்டரால் அடிக்கவும்.
இந்த கலவையை ட்ரேயில் கொட்டி அவனில் 200 டிகிரியில் பேக் செய்து எடுத்து கேக்கை நன்கு ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த பாலை ஊற்றி விப்பிங் கிரீம் பவுடரை போடவும்.
அதில் வெனிலா பவுடர் சேர்த்து 4 நிமிடங்கள் பீட்டரால் அடித்தால் கிரீம் போல் வெண்மையாக வரும்.
பின்னர் ஆறிய கேக்கின் மேல் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுவதும் பூசி எடுக்கவும்.
அடுத்து சிறிது சிறிதாக கலர் ஸ்டிக்ஸை வட்ட வடிவில் கேக்கை சுற்றிய பகுதியிலும் போடவும்.
ஸ்டாபெர்ரியை முழுதும் வெட்டாமல் வட்டமாக சாய்த்தது போல் வெட்டவும்.
அடுத்து வெட்டிய ஸ்ட்ராபெர்ரியை ஒரு பக்கமாக வைக்கவும். ஜெம்ஸை கொண்டு சுற்றிலும் வேண்டிய இடத்தில் அலங்கரிக்கவும்.
சாக்லெட் கேக் ரெடி. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர்..