சாக்லேட் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 400 கிராம் பட்டர்/மாஜரின் - 500 கிராம் சீனி - 500 கிராம் கொக்கோ பவுடர் - 100 கிராம் மில்க் சாக்லேட் - 2 (25 கிராம் x 2) முட்டை - 10 சூடான பால் - அரை கப் வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர்

கொக்கோ பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து வைக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சாக்லேட்டை சூடான பாலில் கரைத்து ஆறியதும் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். மீதமுள்ள சாக்லேட்டை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் ஆயில் பேப்பர் போட்டுத் தயாராக வைக்கவும்.

ஒரு பெரிய பெளலில் பட்டர் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து எக் பீட்டரால் மென்மையாக அடிக்கவும்.

பட்டர் சர்க்கரை கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். (இதே போல் மீதமுள்ள முட்டைகளையும் ஒரு முறைக்கு இரண்டு முட்டைகளாக உடைத்து ஊற்றி அடிக்கவும்).

அதனுடன் சாக்லேட் கலந்த பாலை சேர்த்து அடிக்கவும்.

பிறகு பட்டர் முட்டை கலவையில் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் மெதுவாகக் கலந்து கொள்ளவும். (மைதா மாவு சேர்த்த பின்பு பீட்டரால் அடிக்க வேண்டாம்).

பின் உடைத்த சாக்லேட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பேக்கிங் ட்ரேயில் பாதியளவிற்கு மாவுக்கலவையை ஊற்றி முற்சூடு செய்த அவனில் வைத்து 200 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். டூத் பிக்கால் குத்தி பார்த்து ஒட்டாமல் வரும் போது எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சாஃப்ட் & டேஸ்டி சாக்லேட் கேக் ரெடி.

குறிப்புகள்: