சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட் - 200 கிராம் உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம் செல்ஃப் ரெய்சிங் மாவு - ஒன்றரை கப் பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப் கோக்கோ பவுடர் - கால் கப் பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி முட்டை - 3 மோர் - அரை கப்
செய்முறை:
அவனை 160 C’ல் முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயைத் தயாராக வைக்கவும். மாவு
பேக்கிங் சோடா
கோக்கோ பவுடர்
சர்க்கரை ஆகியவற்றை குறைந்தது மூன்று முறை சலித்து வைக்கவும்.
முட்டையுடன் மோரைச் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
சாக்லேட்டை துருவியோ அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியோ வெண்ணெயுடன் சேர்த்து டபுள் பாய்லர் முறையில் உருக்கிக் கலந்து கொள்ளவும்.
இப்போது அனைத்தும் தயார். மாவுக் கலவையில் முதலில் முட்டை மோர் கலவையைக் கலந்து
பிறகு சிறிது சிறிதாகச் சாக்லேட் வெண்ணெய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கலந்து
பேக்கிங் ட்ரேயில் ஊற்றி அவனில் வைத்து பேக் செய்யவும்.
கேக்கின் உள்ளே கத்தி அல்லது டூத் பிக்கை விட்டு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும். சுவையான சாக்லேட் கேக் தயார். நன்றாக ஆறவிட்டு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.