சாக்லெட் பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
கோகோ பவுடர் - அரைத் தேக்கரண்டி
முட்டை - பாதி
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பால் - சிறிதளவு
பிஸ்கட்டுகளின் நடுவே வைக்கும் கிரீம் செய்ய:
வெண்ணெய் - 20 கிராம்
ஐசிங் சர்க்கரை - 50 கிராம்
கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மைதா, பேக்கிங் பவுடர், கோகோ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இருமுறை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து, நன்றாக அடித்து அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும.
சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்துக் குழைத்துக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
சலித்த மாவை குழைத்த கலவையுடன் சேர்த்து மிருதுவான ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.
கைகளினால் கலக்கவும் (கரண்டி உபயோகிக்கக் கூடாது).
ஒரு பட்டர் பேப்பர் பை செய்து கொள்ளவும். அதில் ஸ்டார் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
அந்த அச்சின் நுனிப்பாகம் கால் அங்குலம் வெளியே தெரியுமாறு இருத்தல் வேண்டும்.
அந்தப் பையில் இந்தக் கலவையை போட்டுக் கொள்ளவும்.
நெய் தடவி, மாவு தூவிய தட்டில் முக்கோணமாகவோ, நீளமாகவோ பிழிய வேண்டும்.
ஒரே வடிவில் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக பிழிந்து கொள்ள வேண்டும்.
பிஸ்கட்டுகளை 380 டிகிரி F சூட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
ஐசிங் சர்க்கரை, கோகோ, வெண்ணெய் இவற்றை நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
பேக் ஆனதும் நன்கு ஆறவிட்டு, இரண்டு இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் கிரீம் தடவி ஒட்டவும்.