சாக்லெட் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கன்டெண்ஸ்ட் மில்க் - ஒரு டின் ஆல் பர்பஸ் மா - 2 1/4 டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்) சீனி - 10 தேக்கரண்டி பட்டர் - ஒரு கப் ( 2 ஸ்டிக் - 225 கிராம்) பேக்கிங் சோடா - 1 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி தண்ணீர்/பால் - ஒரு டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்) பேக்கிங் தட்டு - 10" (x 2") வட்டத்தட்டு

செய்முறை:

அவனை 350 F இல் முற்சூடு செய்யவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பேக்கிங் தட்டிற்கு பேக்கிங் ஸ்பிரே செய்து வைக்கவும்.

மா

கொக்கோ பவுடர்

பேக்கிங் சோடா

பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலித்து வைக்கவும்.

பட்டரை சிறிது உருக்கி சீனி

கன்டெண்ஸ்ட் மில்க் மற்றும் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.

பின்னர் இந்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதனுள் சிறிது சிறிதாக மாக்கலவையை கொட்டி கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும். அடிக்க தேவையில்லை.

பின்னர் இக்கலவையை பேக்கிங் தட்டில் கொட்டி சமமாக பரவி முற்சூடு செய்த அவனில் 35- 40 நிமிடங்கள் அல்லது வேகும் வரை வைக்கவும். (ஒரு டூத் பிக் அல்லது கத்தி அல்லது போர்க்கால் குற்றி பார்த்து கலவை ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக கொள்ளவும்)

பின்னர் வெந்த கேக்கை எடுத்து ஒரு வலைத்தட்டில் போட்டு ஆற விடவும்.

பின்னர் விரும்பிய முறையில் அலங்கரித்து (ஐஸிங் செய்து) பரிமாறவும்.

இலகுவான ஐஸிங் செய்முறை: (Owlet Cake) "பட்டர் ஐஸிங் செய்முறை எனது இந்த குறிப்பில் உள்ளது. http://arusuvai.com/tamil/node/5526 " பட்டர் ஐஸிங் - வெள்ளை

சாக்லெட் பட்டர் ஐஸிங்

sliced Almonds

பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்கள் சாக்கோ நட் அல்லது M&M முதலில் ஒரு பாச்மென்ட் கடதாசியில் owlet உருவத்தை வரைந்து வெட்டி பின்னர் அதனை கேக்கின் மேல் வைத்து வெட்டவும்.

பின்னர் ஒரு பிரஷால் கேக்கை க்ரம்ஸ் (crumbs) இல்லாதவாறு துடைத்து விடவும்.

பின்னர் முகம் மற்றும் உடம்பிற்கு வெள்ளை பட்டர் ஐஸிங் தடவி சமமாக பரப்பி விடவும். மிகவும் அழுத்தமாக (smooth) இருக்க தேவையில்லை.அதன் பின்னர் இறக்கைகளுக்கும் தலையின் ஓரத்திலும் கரைகளிற்கும் சாக்லெட் ஐஸிங் அல்லது பிரவுன் ஐஸிங் தடவவும். இதுவும் அதிக அழுத்தமாக இருக்க தேவை இல்லை.

பின்னர் இரு சிறிய முக்கோண கேக் துண்டுகளை ஐஸிங் தடவி காதுகள் வரவேண்டிய இடத்தில் ஐஸிங் கொண்டு பொருத்தவும் அத்தோடு கண்களிற்கு வட்டமாக வெட்டிய பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்டை வைத்து கண்விழிக்கு பிரவுன் நிற சாக்கோ நட் அல்லது M&M வைக்கவும்.

பின்னர் கண்களை சுற்றியும் வெள்ளை ஐஸிங் தடவிய உடம்பிலும் ஸ்லைஸ்ட் ஆமண்டை (sliced almonds) நிரல் நிரலாக அடுக்கவும். பின் ஒரு டூத் பிக்கால் இறக்கைகளில் ஸ்கலொப் வடிவில் (scallop shape) வரைந்து விடவும். வாய் வரும் இடத்தில் சிறிய தட்டையான கேக் துண்டை ஐஸிங் பூசி வைக்கவும். விரும்பினால் பிரெட்ஸில் ஸ்டிக் (pretzil stick) கொண்டு அடியில் கூடு போல அலங்கரித்து விடவும். இலகுவாக செய்யக்கூடிய ஐஸிங் கேக் தயார்.

குறிப்புகள்: