சாக்லெட் கப் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 75 கிராம் சீனி - 160 கிராம் பட்டர் - 125 கிராம் டார்க் சாக்லெட் - 100 கிராம் வென்னிலா சுகர் - ஒரு பாக்கெட் முட்டை - 3

செய்முறை:

தேவையானவற்றை தயாராக வைக்கவும்.

கப் கேக் செய்ய இதேபோல் மோல்டும்

பேப்பர் அச்சையும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான கோப்பையில் சாக்லெட்டை உடைத்து போட்டு இரண்டு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும்.

சாக்லெட் உருகியதும் அதில் பட்டரை போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வைக்கவும். மைக்ரோவேவ் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து அதன் மேல் சாக்லெட் கோப்பையை வைத்து உருக்கவும். பட்டரையும் அதேபோல் உருக்கவும்.

பட்டரும்

சாக்லெட்டும் உருகியதும் அதை கலக்கிவிட்டு

சீனியை போட்டு கலக்கவும்.

பின் ஒன்றன்பின் ஒன்றாக முட்டையை ஊற்றி கலக்கவும். அதனுடன் மைதா மற்றும் வென்னிலா சுகரையும் போட்டு கலக்கவும்.

மோல்டில் பேப்பர் அச்சை வைத்து அதில் முக்கால் பாகம் சாக்லெட் கலவையை ஊற்றவும். பேப்பர் அச்சு இல்லையென்றால் மோல்டுகளில் நேரடியாக ஊற்றி வைக்கலாம்.

இதை 180° முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கேக் வெந்துவிட்டதா என்று ஒரு டூத் பிக் கொண்டு பார்த்து எடுக்கவும்.

சுவையான சாக்லெட் கப் கேக் தயார். இதனுடன் நட்ஸ்களும் சேர்த்துச் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை பார்ட்டிகளுக்கும் செய்யலாம்.

குறிப்புகள்: