க்ரிக்கெட் ட்ராபி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டர் கேக் - 30 x 20cm அளவானது. (ஐசிங் செய்யப் போகும் அன்று அல்லது முதல் நாள் செய்தால் போதும்.) ஃபாண்டண்ட் - 400 கிராம் பேக்கிங் ஷீட் கபாப் ஸ்டிக்ஸ் - 5 புட் கலர் - சிவப்பு

நீலம்

மஞ்சள்

கருப்பு மெல்லிய தட்டையான பெயிண்டிங் ப்ரஷ் - no 5 பாலட் ஃநைஃப் - no 3 & no 4 ரோலிங் பின் கிச்சன் டவல் - (கிரிக்கெட் பேட் கைப்பிடியிலுள்ள அடையாளங்களைக் கவனிக்கவும்.) சிறிய சில்வர் ஸ்பூன் கோல்டன் சிரப் கடதாசி கத்தரிக்கோல் பென்சில் தர்மாகோல் ஐசிங் சுகர் - 3 கப் பட்டர் - 300 கிராம் விரும்பிய எஸ்ஸென்ஸ் சிறிது டவல் கேக் போர்ட் (கோல்ட் கலர்

மூலைக்கு மூலை 33 cm நீளமான அறுங்கோண வடிவமானது) ஆர்கன்சா ரிப்பன் - 2 மீட்டர்

செய்முறை:

தேவையான பொருட்களை மேலே குறிப்பிட்டுள்ளபடி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ட்ரோஃபி அடிப்பாகம் செய்வதற்கு: முதலில் கேக் அளவையும் (ஐஸிங்குடன் சேர்த்து கேக் கிட்டத்தட்ட 20 x 15 cm வரும்) செய்யவிருக்கும் ட்ரோஃபி அளவையும் மனதில் கொண்டு

பிடித்த டிசைனைக் கடதாசியில் வரைந்து கொள்ளவும். தேவைக்கு ஃபாண்டண்ட் எடுத்து

பேக்கிங் பேப்பரில் ஐசிங் சுகர் தூவி

ரோலிங் பின்னிலும் சிறிது பூசிக் கொண்டு 3 மிமீ கனத்திற்கு தேய்த்து எடுக்கவும். வெட்டி வைத்திருக்கும் கடதாசியை இதன் மேல் வைத்து பாலட் நைஃப் கொண்டு மெதுவாக வெட்டி எடுக்கவும்.

அதே கடதாசியை

சுற்றிவர ஒரே அளவு இடைவெளி விட்டு வெட்டிக் கொள்ளவும்.

முன்பு எடுத்த அளவை விட நான்கு மடங்கு அதிகம் ஐசிங் எடுத்துக் கொண்டு

அதனை 1 செ.மீ அளவு கனத்திற்கு தேய்க்கவும். அதன் மேல் சிறிதாக வெட்டியுள்ள வடிவத்தை வைத்து

வெட்டி எடுக்கவும்.

முதலில் செய்து வைத்திருப்பதன் மேல் மெல்லிதாக தண்ணீர் கொண்டு ப்ரஷ் செய்யவும். ஓரம் வரை பூசத் தேவையில்லை. அதன் மேல் மெதுவாக சிறிய பகுதியை வைத்து விரல் அடையாளங்கள் பதிந்து விடாமல் மெதுவாக அழுத்தி விடவும். தேவைப்படும் இடங்களைத் தேய்த்து சீராக்கி விடவும். (பாலிஷ் செய்யும் முறை பேட் செய்முறையோடு கொடுக்கப்பட்டிருக்கிறது.) தயாரானதும்

முழுவதையும் மஞ்சல் நிறத்தில் பெய்ண்ட் செய்யவும். அது உலர முன்பாகவே

ப்ரஷ்ஷைக் கழுவித் துடைத்துக் கொண்டு கருப்பு நிறத்தைத் தொட்டு மேலே மார்பிள் டிசைன் போல வரும் விதமாக இழுத்து விடவும். கிரிக்கெட் ஸ்டம்ப்கள்

பந்து

பேட் வைக்க இருக்கும் இடங்களைத் தீர்மானித்து குச்சியால் அடிவரை குத்தி விடவும். இதை அப்படியே ஒரு ஓரமாகத் தள்ளி காய விடவும். இந்த நிலையில் கடதாசியோடு தூக்க முயற்சிக்க வேண்டாம்.

கிரிக்கெட் பந்து செய்வதற்கு: நான்காவது குச்சியின் கூரான முனையிலிருந்து ஒரு 4 செ.மீ அளவு விட்டு உடைத்து வைக்கவும். தேவைக்கு ஐசிங் எடுத்து பந்து போல் உருட்டிக் கொண்டு குச்சியில் குத்திக் கொள்ளவும். மேற்பரப்பு ஈரலிப்பு உலர்ந்ததும் சிவப்பு நிறம் பூசிக் காய விடவும்.

பெய்ல்ஸ் செய்முறை: தனித்தனியே இரண்டாகச் செய்யாமல் இரண்டையும் ஒட்டினாற்போல் செய்வது சுலபம். தேவையான அளவுக்கு குச்சியை நறுக்கிக் கொள்ளவும். அதனை ஈரமாக்கி சுற்றிலும் ஐசிங்கை ஒட்டிக் கொண்டு போர்ட்டில் வைத்து உருட்டவும். மேலதிகமான ஐசிங்

குச்சியின் இரண்டு பக்கமும் நீண்டு வரும். அவ்வப்போது இதை நீக்கி விட்டு

மேலும் மெல்லிதாக வரும் வரை உருட்டவும். தனியாக சிறிது ஐசிங் எடுத்து ரோலிங் பின்னால் மெல்லிதாகத் தேய்த்துக் கொள்ளவும். சரியான அளவுக்கு வெட்டி குச்சியின் சரியான இடங்களில் ஈரம் தடவி சுற்றி ஒட்டவும். பாலட் நைஃப் கொண்டு வட்டமாக கோடுகளை அடையாள மிடவும்.

மஞ்சள் கருப்பு வண்ணம் பூசி உருளாமல் பத்திரமாகக் காய வைக்கவும்.

ஸ்டம்ப்ஸ் செய்வதற்கு: 3 கபாப் குச்சிகளை நனைத்து

ஐசிங் கொண்டு மூடி தேவையான பருமன் வரும் வரை போர்ட்டில் உருட்டி எடுக்கவும். குச்சியின் கூரான பகுதி வெளியே இருக்கட்டும். குச்சிகள் மூன்றையும் ஒரே அளவில் நறுக்கிக் கொள்ளவும். சரியான இடத்தில் பாலட் நைஃபை வைத்து மெதுவாக உருட்டி மூன்று ஸ்டம்புகளையும் ஒரே அளவில் சீராக வெட்டிக் கொள்ளவும்.

முதலில் முழுவதாக மஞ்சள் நிறம் பெயிண்ட் செய்து கொள்ளவும். பிறகு வட்டமாகக் கருப்புக் கோடுகளைப் பெயிண்ட் செய்யவும். அசைக்காமல் கிடையாக உலரவிடவும். (நிமிர்த்தி குத்திக் காய வைக்க வேண்டாம். நிறம் வடிந்து கெட்டுப் போய்விடும்.) இடம் மாற்றும் போது சுலபமாக உருளப் பார்க்கும். அப்படி ஆகும் போது நிறங்கள் கலைந்து போகும் சாத்தியம் இருக்கிறது. கவனமாக நகர்த்தவும்.

கிரிக்கெட் பேட் செய்ய: கடதாசியில் கிரிக்கெட் பேட் வடிவத்தை வெட்டிக் கொள்ளவும். தேவைக்கு ஐசிங் எடுத்து கனமான நீள உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

பாலட் நைஃப் கொண்டு தேவையில்லாத பகுதிகளை வெட்டி நீக்கி பேட் அமைப்பைக் கொண்டு வரவும். சிறிது ஐசிங் எடுத்து மெதுவாகத் தேய்த்து எடுத்தால் பள்ளங்கள்

வெட்டுக் கோடுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

கடைசிக் குச்சி

முழு பேட் அளவு + 4 செ.மீ இருக்க வேண்டும். அதனை நனைத்து

மேலும் சிறிது ஐசிங் கொண்டு கவனமாக பேட் பின்புறம் இணைத்துக் கொள்ளவும். கேக்கில் சொருகுவதற்கு அமைவாக கீழே கூரான பகுதி இருக்க வேண்டும். கைப்பிடிக்கான குச்சிப் பகுதி மேலே தெரியும். கைப்பிடியை சரியான அளவில் அமைத்து அதன் மேல் கிச்சன் பேப்பரை வைத்து ஒரு சிறிய சில்வர் கரண்டியில் பின் பக்கத்தால் மெதுவாக அழுத்தித் தேய்த்தால் பேப்பரில் உள்ள டிசைன் கைப்பிடியில் மாறி இருக்கும். கவனமாகச் செய்யவும். அதிகம் அழுத்தினால் கைப்பிடி வடிவம் மாறிவிடும். ப்ரஷ்ஷில் நீல நிறைத்தைத் தொட்டு அதிகம் பூசாமல் மெதுவாக வைக்கவும். பள்ளங்களில் நிறம் இறங்கி இருக்க வேண்டும்.

பேட் பகுதிக்கு மஞ்சள் நிறம் பூசவும். மெல்லிதாக ஒரு துண்டு தேய்த்து கைப்பிடி பாட்டோடு இணையும் இடத்தில் நீர் தொட்டு ஒட்டி விடவும். இதற்கு கருப்பு நிறம் பூசவும். கிடையாகக் காய விடவும்.

300 கிராம் பட்டரை சலித்தெடுத்த 2 கப் ஐசிங் சுகரோடு சேர்த்து நன்கு குழைக்கவும். விரும்பினால் சிறிது எசென்ஸ் சேர்க்கலாம். ஐஸிங் இறுக்கமாக இருக்க வேண்டும்.

கால் கோப்பை வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி கோல்டன் சிரப் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

கேக்கை ஓரங்களைத் நேராக நறுக்கி

குறுக்காக சரி பாதியாக வெட்டிக் கொள்ளவும். கேக் நடுவில் பொங்கி இருந்தால் அதையும் நேராக வரும் விதமாக வெட்டி எடுக்கவும். போர்ட்டின் நடுவில் சிறிது ஐசிங் பூசவும். சரியான இடத்தில் ஒரு துண்டு கேக்கை வைத்து ஒட்டிக் கொள்ளவும். அதன்மேல் கோல்டன் சிரப்பை ப்ரஷ் செய்து கொண்டு இரண்டாவது துண்டை ஒட்டிக் கொள்ளவும். சுற்றிலும் கோல்டன் சிரப் கலந்த நீரால் ப்ரஷ் செய்து மெல்லிதாக ஒரு முறை ஐசிங் பூசவும்.

மெல்லிதாக இரண்டாவது கோட்டிங் பூசவும். மேலே நடுவில் அதிகம் ஐசிங்க வைக்க வேண்டியிராது. வெந்நீரில் பாலட் நைஃபைத் தோய்த்து ஈரத்தைத் துடைத்துவிட்டுத் தேய்த்தால் மேற்பரப்பு பளபளப்பாக வரும். விளிம்புகளையும் மூலைகளையும் சரி செய்யவும்.

போர்ட்டை சுத்தம் செய்துவிட்டு

கேக்கைச் சுற்றி ரிப்பனை வைத்து ஒட்டிக் கொள்ளவும். பாலட் நைஃபை ரிப்பன் மேல் வைத்து மெதுவாக அழுத்தி இழுத்துவிட்டாலே ஒட்டிக் கொள்ளும். ரிப்பன் ஆரம்பமும் முடிவும் கேக் பின்புறமாக வருமாறு ஒட்டவும். மீதி ரிப்பனில் போவ் செய்து பட்டர் ஐசிங் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.

மேலே நடுவில் திரும்ப மெலிதாக ஐசிங் வைத்து முன்பே செய்து வைத்திருக்கும் அடிப்பகுதியை சரியான இடத்தில் ஒட்டிக் கொள்ளவும். ஏற்கனவே உள்ள துளைகளில் ஸ்டம்ப்ஸ்

பந்து

பேட் எல்லாவற்றையும் சொருகிக் கொள்ளவும். ஸ்டம்ப்ஸ் மேல் ஐசிங் வைத்து பெய்ல்ஸை ஒட்டிவிட்டால் வேலை முடிந்தது. ஒரு கிரிக்கெட் பிரியருக்கான அழகான பிறந்தநாள் கேக் தயார்.

குறிப்புகள்: