கோக்கனட் ரவா கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவா - அரை கிலோ

ஏலக்காய் - 3

சீனி - 3/4 கிலோ

தேங்காய் - 1

முந்திரி - 25

உலர்ந்த திராட்சை - 20

டால்டா - 200 கிராம்

உப்பு - 1/4 சிட்டிகை

செய்முறை:

ரவாவை லேசாக வறுக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். தேங்காய் துருவலை லேசாக வறுக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் சீனி போட்டு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

அதில் ரவா, தேங்காய், முந்திரி, உலர்ந்த திராட்சை, டால்டா, ஏலக்காய் போட்டு அல்வா பதம் வரும்வரை கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் தாம்பலத்தில் டால்டா தடவி ரவா கலவை சமமாக பரப்பவும் வில்லை போட்டு ஆறியவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: