கொப்பரை பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - 125 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
முட்டை - ஒன்று
துருவிய தேங்காய் கொப்பரை - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
லெமன் எசன்ஸ் - சில துளிகள்
செர்ரி பழம் - 10
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
செய்முறை:
வெண்ணெயையும், சர்க்கரையும் இலேசாக ஆகும் வரை குழைக்கவும்.
முட்டையை உடைத்து, சிறிது முட்டை வெள்ளையை தனியாக எடுத்து வைக்கவும்.
முட்டையை குழைத்து கலவையில் போட்டு அடிக்கவும். எசன்ஸ் வகைகள் சேர்க்கவும்.
மைதா மாவை பேக்கிங் பவுடருடன் சலிக்கவும்.
குழைத்த கலவையில் மைதா மாவைப் போட்டு கலந்து சிறு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகச் செய்யவும் (கலவை கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கலாம்).
உருண்டைகளை முட்டை வெள்ளையில் தோய்த்து எடுத்து கொப்பரைத் துருவலில் உருட்டவும்.
செர்ரியை மேலே வைக்கவும். நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
380 டிகிரி F சூட்டில் சுமார் 25 முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.