கேரமல் ஸ்பாஞ்ச் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 100 கிராம் மைதா - 100 கிராம் சர்க்கரை - 100 கிராம் முட்டை - 2 பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் பன்னீர் எசன்ஸ் - சில துளிகள் பால் - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்(கேரமல் செய்வதற்கு)

செய்முறை:

மைதா மாவை பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்து சலித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பொடித்து சலித்து வைத்திருக்கும் சர்க்கரையுடன் வெண்ணெயை போட்டு ப்ளண்டர் அல்லது கரண்டியால் நன்கு பஞ்சு போல் மிருதுவாகவும் தூக்கினால் லேசாகவும் ஆகும்வரை கலக்கவும். எவ்வளவு அதிகமாக கலக்குகிறோமோ அந்த அளவிற்கு கேக் மிருதுவாக வரும். கடிகார சுழற்சியில் ஒரே பக்கமாக கலக்க வேண்டும்.

மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்து அதை இந்த வெண்ணெய் கலவையில் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் மைதாமாவை சிறிது சிறிதாக தூவி விட்டு கலக்கவும்.

அதிக கெட்டியாக இருந்தால் அதில் பால் மற்றும் எசன்ஸ் சேர்த்து ப்ளண்டரைக் கொண்டு கலந்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு வறுக்கவும். அது டார்க் ப்ரெளன் நிறம் வந்ததும் சிறிது நீர் சேர்த்து கலக்கவும். கேரமல் தயார்.

இந்த கேரமல் கலவையை கேக் கலவையில் ஊற்றவும்.

கேக் கலவையுடன் கேரமல் சேரும்படி மீண்டும் ஒன்றாக நன்கு கலந்துக் கொள்ளவும்.

ஓடிஜியை 100டிகிரி F முன்பே சூடுப்படுத்தி வைக்கவும். பட்டர் பேப்பரை கேக் ட்ரேயில் விரித்து கேக் கலவையை ஊற்றி ட்ரேயின் பாதி அளவுக்கு நிரப்பவும். ட்ரெயின் ஒரு இன்ச் உயரத்திற்கு காலியாக விட வேண்டும். பின்னர் 25 - 30 நிமிடம் வரை பேக் செய்து கேக் வெந்ததும் எடுக்கவும். வெந்ததா என்பதை அறிவதற்கு மெல்லிய குச்சி அல்லது ஊசியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும் இதுவே கேக்கின் பதம்.

கேக்கை சிறிது நேரம் ஆற விட்டு பின்னர் பட்டர் பேப்பரை நீக்கி விட்டு எடுத்து பரிமாறவும்.

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள கேரமல் ஸ்பான்ஞ் கேக். நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: