கேரட் பனானா மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா - ஒன்றரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி சர்க்கரை - ஒரு கப் கேரட் துருவல் - ஒரு கப் முட்டை - ஒன்று வாழைப்பழம் (சிறியது) - 3 எண்ணெய் - அரை கப் பால் - அரை கப்
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். ஃப்ரிட்ஜில் உள்ளவற்றை எடுத்து ரூம் டெம்பரேச்சர் வரும் வரை வெளியே எடுத்து வைக்கவும். மைதாவுடன்
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை நன்றாக கலந்து கொண்டு அதில் எண்ணெய்
பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதில் துருவிய கேரட் சேர்த்து கலந்து
பின் மசித்த வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை மாவில் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
அதிகம் அடிக்க வேண்டாம். ஒன்றாக கலந்து வந்தால் போதுமானது. கலவை கெட்டியாகவோ
நீர்க்கவோ இருக்க கூடாது. இதற்கு ஏற்றபடி வாழைப்பழ அளவை கூட்டவோ
குறைக்கவோ செய்யலாம்.
தயாராக உள்ள மஃபின் கப்களில் 3/4 பாகம் ஊற்றி 180 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.
20 - 30 நிமிடம் ஆகும். உள்ளே விட்ட டூத் பிக் (அ) கத்தி சுத்தமாக வெளியே வரும் போது தயாராகி விட்டது என தெரிந்து கொள்ளலாம்.
சுவையான கேரட் பனானா மஃபின் தயார். இந்த அளவில் 12 பெரிய மஃபின்கள் கிடைக்கும். இதே கலவையை கேக்காகவும் பேக் செய்யலாம். இது மிகவும் சாஃப்ட்டாகவும்
ஈரப்பதம் உள்ளதாகவும் இருக்கும்.