கேரட் பனானா கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம் முட்டை - 4 ப்ரவுன் சுகர் - 200 கிராம் வெண்ணெய் - 200 கிராம் வாழைப்பழம் - 2 துருவிய கேரட் - 200 கிராம் பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி சமையல் சோடா - ஒரு தேக்கரண்டி துருவிய ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சமையல் சோடா சேர்த்து 3 முறை சலித்து வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அடித்து கூழாக்கி எடுத்து வைக்கவும். ஒரு கோப்பையில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கைவிடாமல் ஒரே திசையில் கலக்கவும்.

கலவை நன்கு சாஃப்ட்டானதும் முட்டையை உடைத்து ஊற்றி

மீண்டும் ஒரே திசையில் கலக்கவும்.

பிறகு மைதா மாவுக் கலவையை சிறிது சிறிதாகத் தூவி ஒரு மரக்கரண்டி அல்லது ஸ்பேட்சுலா (Spatula) கொண்டு மெதுவாக ஒரே திசையில் கலக்கவும்.

மாவு முழுவதையும் சிறிது சிறிதாகத் தூவி பொறுமையாகக் கலந்துவிடவும். அத்துடன் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு துருவிய கேரட் மற்றும் வாழைப்பழக் கூழ் சேர்த்து கலக்கவும்.

இக்கலவையை வெண்ணெய் தடவி

மாவு தூவிய கேக் ட்ரேயில் ஊற்றவும்.

முற்சூடு செய்த அவனில் 180 C - ல் 30 - 40 நிமிடங்கள் வைத்து பேக் செய்து

வெளியில் எடுத்து ஆற விட்டு துண்டுகள் போடவும்.

சுவையும்

மணமும் நிறைந்த கேரட் பனானா கேக் தயார்.

குறிப்புகள்: