கேரட் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 600 கிராம் சீனி- 2 கப் லெமன் - ஒன்று ஏலக்காய் - 2 தண்ணீர் - வேக வைப்பதற்கு

செய்முறை:

கேரட் ஜாம் செய்வதற்கு வேண்டிய பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஜாம் போட்டு வைக்கத் தேவையான சாடிகளை முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

கேரட்டைக் கழுவி சுத்தம் செய்து துருவி

3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

துருவிய கேரட்டுடன் சிறிது நீர் சேர்த்து

20 நிமிடத்திற்கு வேக வைத்து ஆறவிடவும்.

ஏலக்காயைப் பொடி செய்து வைக்கவும். லெமனைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஆற வைத்த கேரட்டை மசித்து

லெமன் சாறு மற்றும் சீனி சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து

விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அனைத்தும் கரைந்து கெட்டியாகி ஜாம் பதம் வரும் வரை கிளறவும்.

ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கி பாட்டிலில் போட்டு வைத்து

மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.

குறிப்புகள்: