கேரட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு - 1 1/2 கப்

2. துருவிய கேரட் - 3 கப்

3. பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி

4. உப்பு - 1/2 தேக்கரண்டி

5. சர்க்கரை - 1 1/2 கப்

6. எண்ணெய் - 1 கப்

7. முட்டை - 3

8. வால்னட் (அ) முந்திரி - 1 கப்

9. ஜாதிக்காய் பொடி - 1 தேக்கரண்டி (விரும்பினால்)

10. பட்டை பொடி - 1 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:

முட்டையை அடித்து வைக்கவும்.

முந்திரி (அ) வால்னட்டை நொறுக்கி வைக்கவும்.

முதலில் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை, பொடி வகை எல்லாம் ஒன்றாக நல்லா கலந்து வைக்கவும்.

இதில் எண்ணெய், முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பொடித்த வால்னட் (அ) முந்திரி, கேரட் துருவல் சேர்த்து கலக்கவும்.

கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு, இந்த கலவை ஊற்றி ஒவனில் (350 'ல் முற்சூடு செய்து) வைத்து பேக் செய்யவும் (அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை எடுக்கும்).

குறிப்புகள்: