கேக் புட்டிங்
தேவையான பொருட்கள்:
மைதா - 500 கிராம்
ஐசிங்சுகர் - 400 கிராம்
பேக்கிங்பவுடர் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 200 கிராம்
எசன்ஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - 12
தண்ணீர் - தேவையான அளவு
இதற்க்கு கஸ்டர்டு தயாரிக்க:
கஸ்டர்டு பவுடர் - 4 மேசைக்கரண்டி
பால் 4 கப்
சீனி - 50 கிராம்
புட்டிங்குக்கு தேவையானவை:
ஆப்பிள் பழம்- 4
வாழைப்பழம் - 4
திராட்ச்சை - 200 கிராம்
க்ரீம் - 2 கப்
கஸ்டர்டு - 2 கப்
சீனி - 50 கிராம்
செய்முறை:
கேக் செய்முறை:
முதலில் மைதாவை பேக்கிங் பவுடரோடு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
பின் 6 முட்டைகளின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து தனியே நுரைக்க அடிக்கவும்.
மீதி உள்ள 6 முட்டைகளையும் உடைத்து முன்பே எடுத்து வைத்த மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்கு நுரைக்க அடித்துக்கொண்டு, அதில் ஐசிங்சுகரை போட்டு நன்கு அடிக்கவும்.
பின் எசன்ஸ் சேர்த்து கலக்கி, மைதாவையும் சேர்த்து கட்டிகளில்லாமல் கலக்கி பட்டரை உருக்கி சேர்த்து சிறிது சுடுதண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் முதலில் அடித்துவைத்த வெள்ளை கருவையும் இந்த கலவையில் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
பின் கேக் ட்ரேயில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை சமமாக பரப்பி ப்ரீ ஹீட் செய்த ஓவனில் வைத்து முக்கால் மணி நேரம் வரை வேகவைத்து வாசனை வந்து கேக் வெந்ததும் எடுக்கவும்.
கஸ்டர்டு செய்முறை:
முதலில் பாலை காய்ச்சி சிறிது பாலை தனியாக எடுத்து அதில் கஸ்டர்டு பவுடரை கலக்கிக்கொள்ளவும்.
பின் மீதமுள்ள பாலை திரும்பவும் அடுப்பில் வைத்து காய்ச்சி கரைத்த கஸ்டர்டு கலவையை ஊற்றி கலக்கி மறு படியும் கொதித்ததும் இறக்கி ஆறவைத்து சீனியை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
புட்டிங் செய்முறை:
1/2 கப் தண்ணீரில் சீனியை சேர்த்து கலக்கி வைக்கவும்.
கேக்கை 4 சம அளவு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, ஒரு ட்ரேயில் ஒரு கேக் துண்டை வைத்து அதன் மேல் சீனி தண்ணீரை தெளிக்கவும்.
பழத்துண்டுகளில் 4 ல் ஒரு அளவு பகுதி பழங்களை கேக் மேல் பரப்பி வைக்கவும்.
அதன் மேல் சிறிது க்ரீம்,கஸ்டர்டு இரண்டையும் சிறிது ஊற்றவும்.
இப்படியே மீதி உள்ள 3 கேக் துண்டுகளையும் செய்து ப்ரீஜரில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து பரிமாறவும்