குக்கீஸ்
0
தேவையான பொருட்கள்:
டேப்லெட் சாக்லெட் - 50 கிராம்
மைதா - 80 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சீனி - 50 கிராம்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெனிலா சுகர் பவுடர் - அரை தேகரண்டி
செய்முறை:
சாக்லெட்டை சிறிது சிறிதாக பொடித்து வைக்கவும்.
வெண்ணெயை உருக்கி அதனுடன் சீனி
வெனிலா சுகர் பவுடர்
பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையைச் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகும்படி பீட்டரால் நன்கு கலக்கவும்.
பொடித்த சாக்லெட் சேர்த்து கலக்கவும்.
வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு குக்கீஸ் போல் இடவும். 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
குறிப்புகள்:
டீ, காபியுடன் பரிமாறவும். இந்த அளவில் 15 குக்கீஸ் செய்யலாம். விரும்பினால் சாக்லெட் சேர்க்காமலும் செய்யலாம்.