குக்கர் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் பொடித்த சர்க்கரை - 3 /4 கப் வெண்ணெய் - அரை கப் முட்டை - 2 டியூட்டி ப்ருட்டி - ஒரு கப் பேக்கிங் பவுடர் வெனிலா எசன்ஸ் பட்டர் பேப்பர் - 1

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 இன்ச் அளவு மணலை போட்டு கேஸில் அதிக தணலில் 30 நிமிடம் சூடு பண்ணவும்

குக்கரின் மூடியை திருப்பி போட வேண்டும். அதாவது விசில் போடும் பகுதி உள் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

வெண்ணெயை எக் பீட்டர் அல்லது ஸ்பூன் உதவியுடன்

நன்கு அடித்து கொள்ள வேண்டும்

பார்ப்பதற்கு கிரீம் மாதிரி வரும். பின்னர் அதனுடன் தூள் செய்த சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.

முட்டையை பீட்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நுரை வருமாறு அடித்துக் கொள்ளவும். அதை இந்த கலவையுடன் சேர்த்து ஸ்பூன் உதவியுடன் நன்கு கலக்கவும்.

அதன் பின் டியூட்டி ப்ருட்டி சேர்க்கவும். டியூட்டி ப்ருட்டிக்கு பதிலாக எல்லா ட்ரை ப்ரூட்ஸும் சேர்க்கலாம்.

பின்னர் ஒரு பின்ச் பேக்கிங் பவுடர்

கால் தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

அதனுடன்

மைதா மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து கொண்டே வரவும். கட்டி சேராதவாறு கலக்கவும்.

எல்லா பாத்திரத்திலும் கேக் செய்யலாம். கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில்

உட்பகுதியில் வெண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மேல் மைதா மாவை தூவவும். மாவு பாத்திரத்தின் எல்லா பகுதியிலும் நன்கு ஒட்டி கொள்ளும். பாத்திரத்தை கீழ் நோக்கி தட்டினால்

மீதம் உள்ள மாவு உதிர்ந்து விடும். கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இப்போது

கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.

இப்போது குக்கரை திறந்து அதனுள் பட்டர் சீட் கடைகளில் கிடைக்கும் அதனை படத்தில் உள்ளது போன்று உள்நோக்கி வைத்து

அதன் மேல் கேக் பாத்திரத்தை வைக்கவும்.

கேஸை ஸ்ம்மில் 20 -30 நிமிடம் வரை வைக்கவும். பின்னர் ஒரு கத்தியால் கேக்கினுள் விட்டு பார்த்தால் கத்தியில் மாவு ஒட்டாமல் வந்தால்

கேக் ரெடி. எடுத்து பீஸ் போட்டு கொடுங்க. வெனிலா எசன்ஸ் வாசம் சூப்பராக வரும்.

குறிப்புகள்: