கிலேஸ் ஐசிங்
தேவையான பொருட்கள்:
ஐஸிங் சுகர் - 225 கிராம்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
கலர் - பின்க் அல்லது கிரீன் அல்லது ஆரஞ்ச்
எசன்ஸ் - வெனிலா அல்லது ஏதாவது ஃப்ரூட் எசன்ஸ்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் ஐஸிங் சுகர், பட்டர், தண்ணீர் மீடியம் நெருப்பில் கலக்கவும்.
சுற்றி ஓரங்களில் பப்பிள் வரும், ஸ்பூன் பின்னாடி ஒட்டியது போல் கலவை வரும். மென்மையாக பளபளன்னு வரும். சூடாக இருக்கும் போதே எசன்ஸ், கலர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
பின்பு நாம் செய்து வைத்திருக்கும் கேக் மீது பரவலாக விடவும், சைடிலும் எடுத்து விட்டு தடவவும். கேக் எதில் வைக்கப்போகிறோமோ அதில் வைத்து இந்த ஐஸிங் செய்தால் நல்ல வரும்.
பின்பு சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ஐஸிங் செட் ஆகி விடும்.
செட் ஆனவுடன் கேக் கட் செய்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
விருப்பப்பட்டால் பட்டர் சிறிது கூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.