கிட்ஸ் பனானா மஃபின் (1)
தேவையான பொருட்கள்:
மைதாமாவு – 2 கப் (250 gm) சர்க்கரை - 1 1/4 கப் (150 gm) கனிந்த வாழைப்பழம் – 3 வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி பால் - 2 மேசைக்கரண்டி முட்டை - ஒன்று (பெரியது) வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி (விருப்பமிருந்தால் மட்டும்) உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்து வைக்கவும். சர்க்கரையை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக பீட்டரை வைத்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும் நன்கு அடிக்கவும்.
அதன் பிறகு வாழைப்பழக் கலவையை ஊற்றி அடித்து விட்டு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
கடைசியாக
சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக தூவி மரக்கரண்டியால் ஒரே சீராக கலக்கவும். (mix and fold method)
இப்பொழுது அவனை 350 F ல் வைத்து முற்சூடு செய்து வைக்கவும்.
நன்றாக கலந்தவுடன் அதை கப் மோல்டுகளில் பேக்கிங் (parchment) பேப்பர் போட்டு அதில் கலவையை ஊற்றி வைக்கவும். பேக்கிங் பேப்பர் இல்லையென்றால் வெண்ணெய் அல்லது பேக்கிங் ஸ்ப்ரே தடவி கலவையை வைக்கவும்.
கலவையை பேக்கிங் மோல்டுகளில் நிரப்பியதும்
பேக்கிங் ட்ரேயில் அடுக்கி முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் 40 நிமிடங்கள் வைத்து (மஃபின் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை) எடுக்கவும்.
சில நேரங்களில் 5 நிமிடம் கூடவோ குறையவோ இருக்கலாம்
அப்போது மஃபின் வெந்ததா என்பதை அறிய கத்தியை வைத்து குத்தி ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்க்கவும்.
மஃபின் வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய பனானா மஃபின் ரெடி.
திருமதி. இளவரசி அவர்களிடம் பல வகையான மஃபின் செய்முறைகள் கைவசம் இருந்தாலும்
இங்கு முதல் முறையாக செய்வதால்
இதுவரை செய்ய தெரியாமலிருக்கும் தோழிகளுக்காக மிகவும் சுலபமான முறையை செய்து காட்டியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால்
வழக்கமாக உபயோகிக்கும் பேக்கிங் சோடா
பேக்கிங் பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் எதுவும் இதில் போடவில்லை. செய்து சுவைத்து மகிழுங்கள்.