காரமல் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 170 கிராம்
வெண்ணெய் - 115 கிராம்
பொடித்த சர்க்கரை - 115 கிராம்
பெரிய முட்டை - 2
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
ஜாம் - 30 கிராம்
பால் - ஒரு தேக்கரண்டி
காரமல் செய்வதற்கு:
தண்ணீர் - 50 மில்லி
சர்க்கரை - 50 கிராம்
செய்முறை:
காரமல் செய்முறை:
சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும்.
சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.
காரமல் கேக் செய்யும் முறை:
பொடித்த சர்க்கரை, வெண்ணெயை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும்.
முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும்.
இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.
மாவையும் பேக்கிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணெய் கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.
நன்றாக அடித்த முட்டை வெள்ளையைப் போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும்.
7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.
குறிப்பு:
முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் அல்லது எனாமல் பாத்திரம் உபயோகிக்கவும்.
பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது.
கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும்.
ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும்.
தேவையானால் ஐசிங் செய்யலாம்.