காரட் கேக் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு டம்ளர்

சர்க்கரை - ஒரு டம்ளர்

முட்டை - 2

காரட் துருவல் - ஒரு டம்ளர்

சோடா உப்பு - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - ஒரு டம்ளர்

முந்திரிப்பருப்பு - 10

ஏலப்பொடி - கால் தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலக்கி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கரண்டியால் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

அதனுடன் சர்க்கரை, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கிக் கொண்டு அதில் மைதா மாவு, முந்திரி, ஏலப்பொடி, கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.

குக்கர் பாத்திரத்தில் நெய் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பிக் கொள்ளவும்.

பிறகு அந்த பாத்திரத்தை இட்லி பானை அல்லது குக்கரில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் இறக்கி, ஆற வைத்து ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

குறிப்புகள்: