காரட் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்) ப்ரெளன் சுகர் - 300 கிராம் முட்டை - 4 மைதா - 300 கிராம் ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி ஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர்

ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அந்த கலவையில் ராப்ஸ் எண்ணெய்

சலித்து வைத்திருக்கும் மைதா கலவை

கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும்.

அதன் பிறகு துருவிய காரட் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கரண்டியால் கலந்து கொள்ளவும். (இப்பொழுது அடிக்கக் கூடாது கரண்டியால் கலக்க வேண்டும். அப்பொழுது தான் கேக் மிருதுவாக இருக்கும்.)

அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும் அல்லது பேக் பேப்பர் விரித்து வைக்கவும்.

பட்டர் தடவிய கேக் ட்ரேயில் காரட் கலவையை ஊற்றி அவனில் வைத்து 175f டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சுவையான காரட் கேக் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக இந்த காரட் கேக்கை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: