காரட் கேக்(சுலபம் தான்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய காரட் - ஒரு கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்(வேக வைத்தது)

முட்டை - 3 (அ) 4

வெண்ணெய் - 1/2 கப்

சர்க்கரை - ஒரு கப்

கண்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்

மைதா - 2 கப்

துருவிய ஆரஞ்சு தோல் - ஒரு தேக்கரண்டி

பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி

காரமல் - 2 தேக்கரண்டி

எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பீட்டரில் (beater) நன்கு அடிக்கவும்.

பின் அதனுடன் வெண்ணெய், சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க், மைதா, ஆரஞ்சு தோல்(துருவியது) ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பீட் (beat) செய்யவும்.

பேக்கிங் சோடாவில் சூடான பால் சிறிது ஊற்றினால் பொங்கி வரும் அப்போது அதையும் சேர்க்கவும்.

காரமல்(crunchy), (பிடித்தமான)எசன்ஸ் சேர்த்து நன்கு beat செய்யவும்.

மைக்ரோ அவன் பாத்திரத்தில் சிறிது பட்டர் தடவி பின் அதன் மேல் மைதாவை தூவி அதன் மேல் நாம் கலக்கிய மாவு, பின் அதன் மேல் பருப்பு மற்றும் காரட், பின் கலக்கிய மாவு அதன் மேல் பருப்பு, அதன் மேல் காரட் என மாற்றி மாற்றி சேர்க்கவும்.

பின் அவனை முற்சூடு செய்து பேக் செய்யவும்.

குறிப்புகள்:

காய் மற்றும் பருப்பு சாப்பிடாத குழந்தைகளுக்காக....

இதனுடன் chocolate pieces கலந்து செய்யலாம். biscut pieces கலந்து செய்யலாம். பீட்ரூட் சேர்க்கலாம். பழங்கள் சேர்த்தும் செய்யலாம். பின் dry fruits or dry nuts சேர்க்கலாம்.