காரட் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் முட்டை - 2 காரட் துருவல் - ஒரு கப் சோடா உப்பு - கால் தேக்கரண்டி உருக்கிய பட்டர் - ஒரு கப் முந்திரிப்பருப்பு - 10 ஏலப்பொடி - கால் தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா
உப்பு
சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி கரண்டியால் அல்லது எக் பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சர்க்கரை
பட்டர் சேர்த்து கலந்துக் கொண்டு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
மைதா
முட்டை கலவையில் முந்திரி
ஏலப்பொடி
கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்றாக் கிளறி விடவும்.
கண்ணாடி பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பி விடவும். பிறகு அந்த பாத்திரத்தை அவனில் 350 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பிறகு டூத் பிக்கைக் கொண்டு கேக்கில் இரண்டு மூன்று இடங்களில் குற்றி பார்த்து
ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு துண்டுகளாக போட்டு பரிமாறவும்.