காஃபி புட்டிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இன்ஸ்டன்ட் காஃபித்தூள் - ஒரு தேக்கரண்டி முட்டை - 4 பால் பவுடர் - ஒரு கப் சர்க்கரை - முக்கால் கப் உப்பு - ஒரு பின்ச (அல்லது) இன்ஸ்டண்ட் காஃபித்தூள் - ஒரு தேக்கரண்டி முட்டை - 4 கன்டென்ஸ்ட் மில்க் - அரை கப் சர்க்கரை - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு பின்ச்

செய்முறை:

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக ப்லென்டர் அல்லது மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

அடித்தக் கலவையை ஒரு மூடி வைத்த ஸ்டீல் பாக்ஸில் ஊற்றவும்.

பாக்ஸை குக்கரினுள் வைத்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கவும்.

விசில் அடங்கியதும் கலவை வைத்தப் பாத்திரத்தை எடுக்கவும். கத்தி அல்லது ஃபோர்க் கொண்டு குத்திப் பார்த்துக் கலவை வெந்து விட்டதை உறுதி செய்யவும்.

ஒரு தட்டில் ஸ்டீல் பாக்ஸை மெதுவாக கவிழ்க்கவும். தேவையான அளவுகளில் துண்டுகள் போடவும்.

இப்போது சுவையான காஃபி புட்டிங் தயார்.

குறிப்புகள்: