கரட் மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு (all purpose flour) - 2 கப்

ப்ரவுன் சீனி/ சுகர் – 1 ½ கப்

முட்டை – 4

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

கொக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிவத்தல்/ கிஸ்மிஸ் ~ 1 கப்

கஜு/முந்திரி ~ 1 கப்

கரட் துருவியது – 2 ½ கப்

பேரிச்சம்பழம் – சிறிது (விரும்பினால்)

எண்ணெய் (வெஜிடேபிள்) ~ 1 கப்

உப்பு – ½ டீஸ்பூன்

பட்டை/ கறுவா தூள் - 1 டீஸ்பூன்

கராம்பு தூள் - 1/4 டீஸ்பூன்

நட்மெக் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக்கொள்ளவும். மாவுடன் , கொக்கோ பவுடர், உப்பு, கராம்பு, கறுவா, நட்மெக் பவுடர்கள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். அவனை (oven) 350 F க்கு முற்சூடு செய்து வைத்துக்கொள்ளவும்.

முதலில், எண்ணெய் மற்றும் சீனியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் அடித்துக்கொள்ளவும்.

பின்பு, முட்டைகளை சேர்த்து அடிக்கவும்.

முட்டை நன்கு அடிபட்டவுடன், மாவுக்கலவையை சேர்த்து சில நிமிடங்கள் ( 2 - 3 நிமிடங்கள்) அடித்துக்கொள்ளவும்.

பின், கரட்டை கொட்டி, ஒரு கரண்டியால் கலந்து கொள்ளவும் (பீட்டரால் (beater)அடிக்கவேண்டாம்).

அதே போல், முந்திரிவத்தல், பேரிச்சம்பழம், கஜு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கப் கேக் ட்ரேயில், பேப்பர் கப்ஸ் வைத்து, அவற்றில் அடித்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி அவனில் (oven) வைத்து பேக் பண்ணிக்கொள்ளவும்.

குறிப்புகள்: