கப் கேக் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 250 கிராம் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 சர்க்கரை - 200 கிராம் வெண்ணெய் - 100 கிராம் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பால் - 120 மில்லிலிட்டர் ஃப்ராஸ்டிங் செய்ய: அன்சால்டட் பட்டர் - ஒரு கப் பவுடர்ட் சுகர் - 2 கப் துருவிய தேங்காய் - ஒரு கப் ப்ளு பெரி - அலங்கரிக்க

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைத்து உருக்கிக் கொள்ளவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெய்

சர்க்கரை

முட்டை

எசன்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு நைசாக மிருதுவான பதத்தில் அடித்துக் கொள்ளவும்.

பின் மைதா கலவை கொஞ்சம்

பால் கொஞ்சம் என சிறிது சிறிதாக கலவையில் போட்டு பேஸ்ட் பதத்தில் கலக்கிக் கொள்ளவும். கட்டி இல்லாமல் நைசாக இருக்க வேண்டும்.

பின் கப் கேக் ட்ரேவில்

கப்களை வைத்து மாவினை 75% வரும் வரை ஊற்றிக் கொள்ளவும்.

350 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட அவனில் ஒரு 20 நிமிடம் வைத்து

கேக் பொன்னிறமாக உப்பி வந்ததும் அணைக்கவும்.

கேக்கினை நன்றாக ஆற விடவும். இல்லையெனில் ஃப்ராஸ்டிங் செய்தால் உருகிவிடும்.

அதிகமான க்ரீம் அல்லது கோகனட் விரும்பாதவர்களுக்கு

க்ரீமையும்

தேங்காய் துருவலையும் கலக்கி ஒரு சுகர் கோட்டிங் மட்டும் போட்டு விடவும். சுவையான கப் கேக் ரெடி.

இனிப்பு விரும்பிகளுக்கு வெண்ணெயையும்

சக்கரையும் நன்கு கலக்கி

கேக்கின் மீது போட்டு

கோகனட் துருவலில் முக்கி எடுத்து ப்ளு பெரிக் கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: