கன்டென்ஸ்டு மில்க் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மில்க்மெய்ட் - ஒரு டின்

மைதா - 200 கிராம்

கோகோ பவுடர் - 10 கிராம்

பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி

சோடா உப்பு - அரை தேக்கரண்டி

சர்க்கரை பொடித்தது - 50 கிராம்

தண்ணீர் - 100 மில்லி

வெண்ணெய் - 100 கிராம்

உப்பு - ஒரு சிட்டிகை

வெனிலா எசென்ஸ் - 5 சொட்டு

முந்திரி - 10

ட்யூட்டி ப்ரூட்டி - 100 கிராம்

செய்முறை:

மைதா, கோகோ, சோடா உப்பு, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றைக் கலந்து நன்றாக இருமுறை சலிக்கவும்.

வெண்ணையையும், சர்க்கரையையும் சேர்த்து நன்றாக குழைய வைக்கவும். கலவை லேசாக ஆகும் வரை குழைக்கவும்.

இத்துடன் மில்க்மெய்ட் பாலையும், சேர்த்து 10 நிமிடம் நன்றாக அடித்து கலக்கவும்.

இவற்றை நுனி விரலால் மட்டுமே கலக்க வேண்டும். 100 மில்லி தண்ணீரையும் இத்துடன் சேர்த்து கலக்கவும்.

நறுக்கிய முந்திரி, ட்யூட்டி ப்ரூட்டியில் லேசாக மைதாவை கலந்து கொள்ளவும்.

வெண்ணெய் கலவையும் மைதா, கோகோ கலவையையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி, நறுக்கிய முந்திரி, ட்யூட்டி ப்ரூட்டியையும் அத்துடன் கலக்கிக் கொள்ளவும்.

அதன் பிறகு வெண்ணெய் தடவிய கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி மிதமான சூட்டில் சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை பேக் செய்து கொள்ளவும்.

கேக் ஆறய பின்பு ஐஸிங் செய்து பரிமாறவும்.

குறிப்புகள்: