கத்தாய் பிஸ்கட்டுகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 200 கிராம்

பொடித்த சர்க்கரை - 100 கிராம்

ரவை - ஒரு மேசைக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி

டால்டா - 120 கிராம்

முந்திரிப் பருப்பு - 10

செய்முறை:

சர்க்கரை, மைதா மாவு, ரவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாகச் சேர்த்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

வனஸ்பதியை உருக்கி (வனஸ்பதி கரைந்தால் போதும். மிகுந்த சூடு இருக்கக் கூடாது) மைதாமாவில் சிறிது சிறிதாக விட்டு கைகளால் பிசையவும்.

உருட்ட வரும் நிலை வந்தவுடன் சிறிய எலுமிச்சம் பழம் அளவில் உருட்டி தட்டில் சிறிது இடைவெளி விட்டு வைத்து மேலே அரை முந்திரிப் பருப்பை பதிக்கவும்.

350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்

குறிப்புகள்: