ஓம பிஸ்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 2 கப்

ஓமம் - 4 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

உப்பு - 1 1/2 ஸ்பூன்

வெண்ணைய் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணைய் - பொரிக்க

செய்முறை:

மிளகை நன்றாக தூள் செய்யவும். மிளகுத்தூளுடன் மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

பூரிக்கு இடுவது போல் தேய்த்து வைக்கவும்.

அதை கத்தியால் நீளமாக ( ) போல கட் செய்யவும்.

எண்ணையை சூடாக்கி அதில் போட்டு பொரிக்கவும்.

குறிப்புகள்:

இந்த மழை சீசனுக்கு மிகவும் நல்லதொரு பிஸ்கட்.

நீளமாக இருப்பதால் 6 மாதகுழந்தைகள் கூட கையில் பிடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.