ஓட்ஸ் பனானா மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா/ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப் ரோல்ட் ஓட்ஸ் - ஒரு கப் உப்பு - அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் முட்டை - ஒன்று வெஜிடபிள் ஆயில் - 1/3 கப் பால் - 3/4 கப் வாழைப்பழம் - ஒரு கப் (மசித்தது) வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி ரெய்சின்ஸ் - அரை கப்

செய்முறை:

ஆல் பர்பஸ் ஃப்ளாருடன் பேக்கிங் பவுடர்

பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும். இதனுடன் ரோல்ட் ஓட்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் பால்

வெஜிடபிள் ஆயில் மற்றும் மசித்த வாழைப்பழம் சேர்க்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த வாழைப்பழ கலவையை மாவு-ஓட்ஸ் கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடைசியாக உலர்ந்த திராட்சை சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருக்கும்.

ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனர்ஸ் வைத்து அதில் 3/4 பாகம் வரை மாவை நிரப்பவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் அல்லது சிறிய குழிக்கரண்டியில்/சட்னி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றலாம்.

அவனை 350 டிகிரி F ல் (180 டிகிரி C ) முற்சூடு செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

மஃபின் வெந்ததும் நன்றாக மேலெழும்பி

மேற்பகுதி கோல்டன் ப்ரவுன் கலரில் மாறியிருக்கும்.

சுவையான ’ஓட்ஸ்-பனானா-ரெய்சின் மஃபின்’ தயார்.

இதனை சூடான காஃபி/டீயுடன் பரிமாறலாம். சத்தான காலை/மாலை நேர ஸ்நாக்.

குறிப்புகள்: