ஓட்ஸ் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - ஒரு கப்
மைதா மாவு - கால் கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பௌடர் - 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
வெண்ணெய் - அரை கப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பார்ச்மன்ட் பேப்பர் (அ) பாயில் + பேக்கிங் ஸ்ப்ரே - தேவைக்கு
செய்முறை:
எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். எப்பொழுதும் கேக் அல்லது குக்கி செய்யும் போது அளவு சரியாக இருத்தல் அவசியம். வெண்ணெய்
முட்டை குளிர்ந்திருக்க கூடாது.
வெண்ணெயையும் சர்க்கரையும் சேர்த்து ப்ளெண்டர் கொண்டு அடிக்கவும். இந்த கலவை கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் போதே நிறுத்தி விட வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், மைதா, உப்பு, பேக்கிங் பௌடர் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
இப்பொழுது இந்த முட்டையை எடுத்து ஓட்ஸ் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை இப்பொழுது வெண்ணெயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவனை 325 F முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பார்ச்மன்ட் பேப்பர் வைக்கவும். இப்பொழுது ஒரு தேக்கரண்டி கலவையை எடுத்து தட்டி வைக்கவும். அதே போல் எல்லா மாவிலும் செய்து இடைவெளி விட்டு அடுக்கி ஓவனில் வைக்கவும். குக்கி வேகும் போது இலகும் அதனால் இடுக்கி இடுக்கி வைக்க கூடாது. 10-15 நிமிடம் பேக் செய்யவும்.
குறிப்புகள்:
மாலை நேர காபியுடன் சாப்பிடக்கூடிய அருமையான ஓட்ஸ் குக்கீஸ் ரெடி.