ஏஞ்சல் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மில்க் பவுடர் - ஒரு கப்

சர்க்கரை - 2 கப்

மைதா - ஒரு கப்

நெய் - முக்கால் கப்

ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் அரைக் கப் நெய் விட்டு, அடுப்பை நிழல் போல் எரிய விட்டு, மைதாவை இனிய மணம் வர வறுக்கவும்.

கீழே இறக்கி வைத்து ஆறின பின்பு, அத்துடன் மில்க் பவுடரை சிறிது கூடக் கட்டியில்லாமல் கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும் அரைக் கப் தண்ணீரையும் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும். கெட்டிப் பாகாக காய்ச்ச வேண்டும்.

ஒரு சொட்டுப் பாகை தண்ணீரில் விட்டால் உருட்டிக் கொண்டு வரும் பதத்திற்கு காய்த்துக் கொள்ளவும்.

பிறகு கீழே இறக்கி பால் பவுடர்-மைதா கலவை, ஏலப்பொடி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ எல்லாம் சேர்த்து, கை விடாமல் கிளறவும்.

கலவை நன்கு இறுகி, சப்பாத்தி மாவு போல் ஆனதும், நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.

குறிப்புகள்:

இறக்கியதும் 2 பாகங்களாகப் பிரித்து, 2 வண்ணப் பொடிகளைக் கலந்து, இரண்டு வண்ண கேக்காகச் செய்யலாம்.

கடைகளில் கிடைக்கும் டூட்டி ஃப்ரூட்டி வாங்கி, ஏலப்பொடி, குங்குமப்பூவிற்கு பதிலாகச் சேர்த்துச் செய்யலாம்