எலுமிச்சை மார்மலேட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பழுத்த எலுமிச்சை - 10 - 12

உப்பு - 1/4 கப்

வினிகர் - 1/4 கப்

சீனி - 1/2 கப்

செய்முறை:

எலுமிச்சம் பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.

வினிகரில் சீனி, உப்பு கலந்து மிதமான சூட்டில் காய்ச்சவும்.

பின்னர் அதனுள் எலுமிச்சம் பழங்களை போட்டு அவிய விடவும்.

எலுமிச்சம் பழங்கள் நன்கு அவிந்து மென்மையானதும் நசித்து விடவும்.

கரைசல் தடித்ததும் இறக்கி ஆறவிட்டு சுத்தமான காய்ந்த போத்தலில் போட்டு மூடி ஒரு வாரத்திற்கு ஊற விடவும்.

பின்னர் எடுத்து குலுக்கிவிட்டு தேவையான போது சுத்தமான காய்ந்த கரண்டியால் எடுத்து உபயோகிக்கலாம்.

பாண், ரொட்டி, நாண் என்பவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். லேயர் எலுமிச்சை கேக்கிற்கும்(Lemon cake) இடையில் வைக்கும் ஃபில்லிங்காக பாவிக்கலாம்.

குறிப்புகள்:

வினிகர் இல்லாவிட்டால் வேறு எலுமிச்சையில் சாறெடுத்தும் பாவிக்கலாம். வினிகர் சேர்த்தால் சிறிது நாட்கள் கூடுதலாக கெடாமல் இருக்கும்.