எலுமிச்சை குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
துருவிய எலுமிச்சைத்தோல் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 120 கிராம்
எலுமிச்சை சாறு - அரைத்தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
சீனியை நன்கு பொடி செய்து கொண்டு அதனுடன் வெண்ணெய் மற்றும் துருவிய எலுமிச்சைப்பழத் தோலையும் சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கிக் கொண்டு அதனுடன் தயிர் மற்றும் எசன்ஸையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா உப்பினைச் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இட்லி மாவு பதத்திற்கு இருக்குமாறு கலந்து கொள்ளவும். மிகவும் நீர்த்து விடக்கூடாது.
எண்ணெய் தடவப்பட்ட குக்கீஸ் பேப்பரில் ஒரு ஸ்பூன் கொண்டு மாவினை சிறிது இடைவெளி விட்டு விட்டு ஊற்றவும்.
அதன்மீது சீனித் துகள்களைத் தூவவும். பிறகு பேப்பருடன் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஓவனில் வைத்து 350 டிகிரி பாரங்ஹீட்டில் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும்.
அல்லது குக்கீஸின் ஓரங்கள் பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.