எக்லெஸ் மேங்கோ கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சன்ன ரவை - ஒரு கப் மாம்பழக்கூழ் - ஒரு கப் சர்க்கரை - அரை கப் வெண்ணெய் - கால் கப் + 2 மேசைக்கரண்டி (அதாவது கால் கப்பிற்கு சற்று கூடுதலாக) பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் - சிறிது (விரும்பினால்)

செய்முறை:

மிக்ஸியில் மாம்பழத்தை அடித்து கூழ் எடுக்கவும். பேக்கிங் டிஷ்ஷில் வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும். அவனை 190 C’ல் முற்சூடு செய்யவும்.

ரவையுடன் சர்க்கரை

பேக்கிங் பவுடர்

ஏலக்காய் தூள் சேர்த்து வைக்கவும்.

அதனுடன் மாம்பழக்கூழ் சேர்த்து கலக்கவும். வெண்ணெயை உருக்கி ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும்.

மாம்பழ ரவை கலவையுடன் உருக்கிய வெண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளவும். அதை அப்படியே 10 - 15 நிமிடம் வைத்திருக்கவும்.

பிறகு கலந்துவிட்டு பேக்கிங் டிஷ்ஷில் பரவலாக நிரப்பி அவனில் வைக்கவும். (இந்தக் கலவை மஃபின் கலவை போல கெட்டியாக இருக்கவேண்டும்).

20 - 30 நிமிடம் பேக் செய்து டூத் பிக்கை உள்ளே விட்டு ஒட்டாமல் வெளியே வரும் போது எடுக்கலாம்.

சாஃப்ட் & டேஸ்டி எக்லெஸ் மேங்கோ கேக் ரெடி. நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: