எக்லெஸ் கீ குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
சீனி - கால் கப்
நெய் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய்யுடன் சீனி
வெனிலா எசன்ஸ் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அதனுடன் மைதா மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை எடுத்து சம அளவு உருண்டைகளாக உருட்டி பேக்கிங் டிரேயில் அடுக்கி முற்சூடு செய்த அவனில் வைத்து 160 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்ததும் சாஃப்டாக இருக்கும். வேறு தட்டில் மாற்றி ஆற விட்டால் க்ரிஸ்பியாகிவிடும்.
எளிதாகச் செய்யக்கூடிய சுவையான எக்லெஸ் கீ குக்கீஸ் ரெடி. மாலை நேர குயிக் ஸ்நாக்காக பரிமாறலாம். வாயில் போட்டதும் கரைந்துவிடும்.