எக்லஸ் நட்ஸ் பனானா மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு - 3/4 கப்

2. வாழைப்பழம் - 2

3. பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை - சிறிது

4. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

5. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

6. சர்க்கரை - 1/2 கப் [வாழைப்பழத்தின் சுவைக்கு ஏற்ப]

7. எண்ணெய் - 1/4 கப்

8. வெண்ணிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அவனை 190C’ல் முற்சூடு செய்யவும்.

வாழைப்பழத்துடன் வெண்ணிலா எஸன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கூழாக்கவும்.

மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.

இத்துடன் வாழைப்பழமும், எண்ணெயும் கலந்து நட்ஸ் சேர்த்து வைக்கவும்.

மஃபின் ட்ரேவில் லைனர்ஸ் வைத்து மாவை 3/4 பாகம் வரை நிரப்பவும்.

இதை அவனில் வைத்து 25 - 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.

சுவையான எக்லஸ் நட்ஸ் பனானா மஃபின் தயார்.

குறிப்புகள்: