உருளைக்கிழங்கு பிஸ்கெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

மைதா மாவு - 1/2 கப்

வெண்ணெய் - 3 டீஸ்பூன்

தக்காளி - 2

மிளகுத்தூள் 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

தக்காளியை வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து தோலை உரித்து அரைத்துக்கொள்ளவும்.

மைதா, வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

மாவை உருட்டி சற்று கனமான வட்டங்களாக இட்டு வெட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: