உருளைக்கிழங்கு கார பிஸ்கட்டுகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 80 கிராம்

வேகவைத்த உருளைக்கிழங்கு - 80 கிராம்

மைதாமாவு - 200 கிராம்

மிளகாய்ப் பொடி - கால் தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.

மாவு, காரப் பொடி, உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.

வெண்ணெயை நன்றாகக் குழைத்துக் கொண்டு அத்துடன் பிசைந்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.

சலித்த மாவைக் கலந்து பூரிமாவு போல பிசையவும்.

அப்பளம் போல் இட்டு ஒரு அங்குல அகலம், இரண்டு அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய துண்டங்களை நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.

380 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

குறிப்புகள்: