ஈஸி யம்மி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 6 மைதா - ஒரு கப் சீனி - ஒரு கப் நெய் - 4 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

முதலில் முட்டை

சீனி

உப்பு

வெனிலா எசன்ஸ் அனைத்தையும் சேர்த்து கிரைண்டரில் 30 நிமிடம் அரைக்கவும். அரை மணி நேரம் களித்து கலவை நன்கு நுரை பொங்கி இருக்கும்.

அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கையால் நன்கு கலக்கவும். பின் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கலக்கவும்.

அடுத்து ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் 1 1/2 மேசைக்காண்டி நெய் ஊற்றி லேசாக சூடு செய்யவும்.

பின் கேக் கலவையை அதில் ஊற்றவும்.

அதன் பிறகு தம் போடும் ப்ளேட்டிலோ அல்லது தோசை கல்லிலோ வைத்து அலுமினியம் பேப்பர் போட்டு நன்கு மூடி அனலை சிம்மில் வைத்து 30 நிமிடம் வேக விடவும்.

பின் திறந்து பார்த்தால் நன்கு வெந்து மேலே மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும்.

பின் அதை ஒரு தட்டில் கவிழ்த்தி படத்தில் உள்ளது போல் தட்டவும்.

பின் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள நெய்யை ஊற்றி மேல் பாகம் அடியிலும் அடிபாகம் மேலும் இருக்குமாறு வைத்து மூடி போட்டு ஒரு 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

சுவையான கேக் தயார். துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: