ஈஸி ப்ரவ்னி வித் சிம்பிள் ஐஸிங்





தேவையான பொருட்கள்:
ப்ரவ்னி செய்ய : மைதா - ஒரு கப் பட்டர் - அரை கப் முட்டை - 2 சாக்லெட் சிப்ஸ் - 3/4 கப் கொக்கோ பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி இன்ஸ்டண்ட் காஃபித்தூள் - அரை தேக்கரண்டி பொடித்த சீனி - 3/4 கப் உப்பு - கால் தேக்கரண்டி ஐஸிங் செய்ய : பொடித்த சீனி - ஒரு கப் கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி பட்டர் - 1 1/2 மேசைக்கரண்டி பால் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பட்டர்
முட்டை இவைகளை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்து விடவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சாக்லெட் சிப்ஸுடன் பட்டர் சேர்த்து மைக்ரோவேவில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்.
சாக்லெட் மற்றும் பட்டர் உருகிய நிலையில் இருக்கும். அதை நன்கு ஒன்று சேர கலக்கி ஆற விடவும்.
அதற்குள் பேக் செய்ய தேவையான பாத்திரத்தை எடுத்து் பேக்கிங் பேப்பரை கொஞ்சம் வெளியே வரும் அளவு நறுக்கி அதில் போட்டு பட்டர் தடவி வைத்து கொள்ளவும். மைதா
கொக்கோ பவுடர்
காஃபி பவுடர்
உப்பு இவைகளை ஒன்றாக சலித்து வைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஆறிய நிலையில் இருக்கும் சாக்லெட்
பட்டர் கலவையில் முட்டையை சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். அதனுடன் பொடித்த சீனி
சலித்து வைத்திருக்கும் மாவு வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கரண்டியால் கலந்து விடவும்.
பின்பு அதை பேக்கிங் தட்டில் கொட்டி பரவலாக தடவி விட்டு 180 டிகிரியில் அவனை முற்சூடு செய்து விட்டு இதனை 40 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். பேக் ஆனதும் வெளியில் எடுத்து நன்கு ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த சீனி மற்றும் கொக்கோ பவுடரை போட்டு அதனுடன் பட்டரை சேர்த்து ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறி விடவும். ஓரளவு கலந்ததும் பால் சேர்த்து நன்கு கிளறும் போது தான் அது மிருதுவான கலவையாக ஆகும்.
அதை ஆறிய ப்ரவுனியின் மேல் பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.
அதன் மேல் கலர் மற்றும் சாக்லெட் ஸ்ப்ரிங்க்ள்ஸை கொண்டு அலங்கரிக்கலாம்.
இதனை அப்படியே இரண்டு மணிநேரம் வைத்து செட்டான பின் பேக்கிங் பேப்பரை கொண்டு வெளியில் அப்படியே எடுத்து தட்டில் வைத்து துண்டுகள் போடலாம். சீக்கிரம் தேவைப்படும் எனில் ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து எடுத்து துண்டுகள் போடலாம்.