ஈஸி தம் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - முக்கால் டம்ளர் முட்டை - ஐந்து சீனி - ஒரு டம்ளர் நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி பீட்டரால் நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

அதன் பின் உப்பு மற்றும் சீனியை சேர்த்து மேலும் நன்கு சீனி கரையும்படி ஐந்து நிமிடங்கள் அடிக்கவும்.

பின்பு அடித்துக் கொண்டே அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும்

கடைசியில் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை அடிக்கவும்.

அடுப்பில் தம் போடும் ப்ளேட்டை வைத்து அதன் மேல் ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி சிம்மிலேயே நன்கு சூடு வர செய்யவும். சூடு ஏறியதும் அதில் இந்த கலவையை ஊற்றவும்.

அதன் பின்னர் ஸ்டீம் வெளியாகாத வண்ணம் மூடியை மூடி விடவும்.

சரியாக முக்கால் மணி நேரம் சென்ற பின் மூடியை திறந்து பார்த்தால் மேலே மட்டும் வெள்ளையாக இருக்கும். எனவே பாத்திரத்தை எடுத்து தளர்த்தி விட்டால் ஓரமெல்லாம் ஒட்டாமல் இருக்கும்.

பின்பு அதை ஒரு தட்டில் கவிழ்த்து பின்பு அதே பாத்திரத்தில் மேல் பாகம் அடியிலும்

அடிபாகம் மேலும் இருக்குமாறு வைத்து மறுபடியும் மூடி போட்டு அதே தனலில் 10 - 15 நிமிடம் வரை வைக்கவும்.

15 நிமிடம் கழித்த பிறகு எடுத்து உடனே கவிழ்த்தால் அழகாக இருபக்கமும் கேக் சிவந்து இருக்கும்.

உடனே துண்டுகள் போட்டு பரிமாறலாம். மிகவும் மிருதுவாக இருக்கும். சாப்பிடவும் நல்ல சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: