ஈஸி சுகர் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
அரை கப் மைதா மாவு - 2 1/4 கப்
சர்க்கரை - அரை கப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சர்க்கரையைப் பொடி செய்து
வெண்ணெயுடன் சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையைச் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இக்கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
மாவைப் பிசைந்ததும் திரட்டும் பதத்தில் தான் இருக்கும். (உடனேயே திரட்டுவதானால் திரட்டலாம்).
மாவு மிருதுவாக திரட்ட வராதது போல இருந்தால் ப்ளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கலாம். அவனை 190 C’ல் முற்சூடு செய்யவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை திரட்டி பிஸ்கட் கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டி
பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கி அவனில் வைத்து 10 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.